மக்களைத் தேடி மருத்துவம் திட்ட விரிவாக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் பெருமாள் பட்டியில் உள்ள ராமராஜ், சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட்., கம்பெனியில்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தொற்றா நோய்களுக்கான பணியிடம் சார்ந்த தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் முரளி சங்கர் இந்த முகாமினை தொடங்கி வைத்தார்.
முகாமில் ஆண் பெண் அனைவருக்கும் தொற்றா நோய்களான இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் பரிசோதனை மற்றும் அதைச் சார்ந்த பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகள பி ஹச் சி ஈ எஸ்ஐ
மருத்துவ குழுவினரால் பரிசோதனை நடைபெற்றது.
இம்முகாமில் தொற்றா நோய்கள் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர்.சற்குணம், கரிவலம்வந்த நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பாலகுமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சக்திப்ரியா நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், நலக் கல்வியாளர் ஆறுமுகம், வட்டார, சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும்
சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்