செங்கோட்டை வட்டாரத்தில்- தென்னை பயிர் மேலாண்மை விப்புணர்வு முகாம்;-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம்
கம்பிளி கிராமத்தில் தென்னம் பயிர் கடந்த
31.11.23 முதல் தோட்டக்கலை துறையிடமிருந்து’ மாற்றம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தென்னையில் பரவும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கான மேலாண்மை விழிப்புணர்வு முகாம் செங்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரவீன்குமார் தலைமையில்
நடைபெற்றது.
இம்முகாமில் வேளாண் ஆராய்ச்சி நிலைய தோட்டக் கலை விஞ்ஞானி இளவரசன்தென்னையை அதிகளவு பாதிக்ககூடிய காண்டாமிருகவண்டு, சிவப்பு பனை அந்துபூேச்சி, ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், வாடல் நோய், பிற காரணிகளால் ஏற்படக்கூடிய தாக்குதல் அறிகுறிகள் பற்றியும், அவற்றை உர மேலாண்மை, கவர்ச்சி பொறிகள் மூலம் கட்டுப்படுத்துவது பற்றியும் தெளிவான விளக்க உரையை எடுத்துக் கூறினார்.
முகாமில் தென்னையில் நோய்,பூச்சி மேலாண்மைப் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன முகாமிற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர் ஜீனத் பேகம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள்நாக ஆனந்தஜோதி, முருகன், செல்வி. இசைவாணி, ஷாலின்ராஜ்ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் ஏராளமான தென்னை விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.