சீர்காழி அருகே கதிராமங்கலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தரங்கம்பாடி மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சீர்காழி அருகே கதிராமங்கலம் கிராமத்தில் மழை நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை ஆய்வு செய்து அமைச்சர் மய்யநாதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 18000 ஏக்கர் சம்பா பயிர்கள் மற்றும் 1000 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை மூலம் உரிய கணக்கெடுப்பு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அமைச்சரின் ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *