இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் (ICSI) – கோவை கிளையின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!

தமிழக தகவல் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) தனது கோவை கிளைக்கான புதிய அலுவலகத்தை, காளப்பட்டி பகுதியில் துவக்கி வைத்தது.

இந்த புது அலுவலகம் மொத்தம் 3 மாடிகள் கொண்டது. முதல் தளத்தில் அலுவலக அறை மற்றும் நூலகம் உள்ளது. இரண்டாம் தளத்தில் வகுப்பறைகள் உள்ளன. மூன்றாம் தளத்தில் கருத்தரங்கு அரங்கம் உள்ளது.

தமிழக தகவல் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த 10,000 சதுரடி கொண்ட புது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தில் கம்பெனி செக்ரட்டரி (நிறுவன செயலர்) என்பவர் முக்கிய பங்காற்றும் நபர். ஒருவர் கம்பெனி செக்ரட்டரி ஆகவேண்டும் என்றால், இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் கீழ் (ICSI) CS பயின்று தேர்ச்சி அடையவேண்டும்.

ICSI கோவையின் கீழ் வரும் பகுதிகளில் சுமார் 2,500 மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் CS பட்டம் பயின்று வருகின்றனர். பலருக்கும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ICSIயின் ஒரு பிராந்திய அலுவலகமும், 3 கிளை அலுவகங்களும் மட்டுமே இருப்பதால், இந்த புது கட்டிடம் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள CS பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதை தொடர்ந்து, ICSI சார்பில் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளிலிருந்து CS தேர்ச்சி பெற்றவர்களுக்கு பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி கல்லூரி அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *