வலங்கைமானில் பொங்கள் பரிசு தொகுப்புகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள அங்காடியில், வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. தட்சிணாமூர்த்தி வலங்கைமான் நகர செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,முழு கரும்பு ஒன்னு, ரூபாய் ஆயிரம் ரொக்கம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி மாணிக்கவாசகம், க. செல்வம், பானுமதி வி.சி. இராஜேந்திரன், ரம்ஜான் பீவி சிவராஜ்,வீரமணி, நூர்ஜகான் பேகம் ஜெகபர் அலி, ஆனந்த் வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன் மற்றும் வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோன்று வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள,50 ஊராட்சிகளில் உள்ள அங்காடிகளில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டன.