சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து துருவ செயற்கைக்கோள் ஏவுகல ராக்கெட் மூலம் கருந்துளைகள் போன்ற வானியல் பொருட்கள் குறித்த நுண்ணறிவுகளை வழங்கும் ‘எக்ஸ்போசாட்’ என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

அந்த வகையில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்பட பல்வேறு அம்சங்களை ஆராய உள்ளது..

என்கிற தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்துவிஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *