ஊத்துமலையில் நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;-

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம்
ஊத்துமலையில் மனுநீதி நாள் முகாம், மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது

தென்காசி சட்டம் மன்ற உறுப்பினர் பழனி நாடார்,வீரகே ரளம்புதூர் தாசில்தார் அழகப்பராஜா,ஆலங் குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முரளி ராஜா, மலர்கொடி கோட்டைச்சாமி, ஊத்துமலை பஞ்சாயத்து துணை தலைவர் பிச்சம்மாள் முத்தரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

தென்காசி கோட்டாட்சி தலைவர் லாவண்யா
வரவேற்றார்.

கடந்த மாதம் நடந்த மனுநீதி நாள் முகாமில் பெற பெற்ற 144 மனுக்களில் 69 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

அவற்றில் 59 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை,சார்ந்த திட்டங்களின் மூலம் ரூபாய் 2 லட் சத்து 44 ஆயிரத்து 975 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும்
நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு, அது சார்ந்த அலுவலர்கள் எடுத்து கூறினர்.

அதனை தொடர்ந்து, பல்வேறு துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், பொது மக்களுக்கு விளக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் காட்சிகளை ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வோளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி ஆதிதிராவிட நல அலுவலர் முருகனந்தம்,தணி .ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தெய்வரெங்க பெருமாள், வட்ட வழங்கள் அலுவலர், அனிதா,முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் சார்ந்த அலுவர்,ஜோதிவேல், தனி தாசில்தார் கண்ணன்,சமுக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் மகாலெட்சுமி, வட்ட வழங்கள் அலுவலர் ஜெஸ்லெட்ஜெயா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், முருகேசன்,வீரகேரளம்புதூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தாமரைச்செல்வன், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், கருப்பசாமி, ராமர், இசக்கிமுத்து, உத்துமலை கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, கிராம உதவியாளர் முருகேஸ்வரி,உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *