வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியில் வட்ட செயலாளர் கருப்பசாமி அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அரசாணை என் 243 ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய குறைப்பாட்டை போக்க சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பதிவு உயர்வு, காலி பணியிடங்கள் நிரப்புதல், ஒப்படைப்பு மற்றும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் போன்ற 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பான கோசங்கள் எழுப்பப்பட்டன.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டத் தலைவர் கோ. பாலசுந்தரம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியில் வட்டத் தலைவர் இன்பராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் இளங்கோவன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் துணைத் தலைவர் அந்தோணி பாஸ்கர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட செயலாளர் டி.வீரமணி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கோ. வீரமணி ஆகியோர் கவன ஈர்ப்பு போராட்ட கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார துணை செயலாளர் அ.விஜய பூபாலன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள அனைத்து இயக்கத்தை சேர்ந்த சுமார் 170 நபர்களுக்கு மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.