தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்.
நத்தம் கிராமத்தில் சுற்றுலாத் துறை சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா! மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து கொண்டாடிய கலெக்டர்.

திருப்பத்தூர்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நத்தம் கிராமத்தில் தமிழக சுற்றுலாத்துறை மற்றும் நத்தம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்ள திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது ஊர்பொது மக்கள் கலெக்டர் குடும்பத்தினரை தமிழர்களின் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் அமர வைத்து பொங்கல் திருவிழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் பொங்கல் பானைக்கு பூஜை செய்து பச்சை அரிசி சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புது பானை மற்றும் புதிய அடுப்பு வைத்து பொங்கலோ பொங்கல் என முழுக்கமிட்டு சர்க்கரைப் பொங்கல் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..