மேட்டுப்பாளையம் காந்திநகரில் செயல்பட்டுவரும் காரமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியில் பொங்கல் விழா விமர்சையாக
நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் புனித செல்வி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மரு.காஜா மைதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .
ஆசிரியர் உமா பொங்கல் விழா பற்றி உரை நிகழ்த்தினார். ஆசிரியை அக்சாள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பள்ளி மாணவர்கள் பாரம்பரிய
இசைக்கருவிகள் இசைத்து நடனமாடி பொங்கல் வாழ்த்துகளை உற்சாகத்துடன் தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கீர்த்திகா, அரிமா.ஜெயராமன் சமூக ஆர்வலர்
விக்னேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் அமல சிந்தியா நன்றியுரை வழங்கினார்.