வலங்கைமான் சி. பி. ஜி. ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து மாணவர்கள்- ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சி பி ஜி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் எம். எல். ஏ, வழிகாட்டுதல் படி இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவின்போது பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சேர்ந்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தனர், பின்னர் அனைவரும் பொங்கல் சுவைத்து கொண்டாடினர்.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் -ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய வழக்கப்படி வேட்டி சேலை அணிந்து பங்கேற்றனர். மேலும் மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் சி. பி.ஜி.அன்பழகன், பள்ளி முதல்வர்கள் வேலவன் மற்றும் சசிரேகா, துணை முதல்வர் நாராயணசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெய. இளங்கோவன், துணைத் தலைவர் க. பாலசுப்பிர மணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.