அரியலூரில்மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய காவல்துறையினர்
அரியலூரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து அரியலூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படுவதால், அவர்கள் தங்கள் பணி புரியக்கூடிய நிறுவனங்களில் முன்கூட்டியே பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதன் அடிப்படையில், மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலக வாயிலில் கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து, வேண் பொங்கல், சர்க்கரை பொங்கல் பொங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி உற்சாகமாகக் கொண்டாடினர்.மேலும், பணியாற்றக்கூடிய அனைத்து அதிகாரிகளும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களும், காவல்துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் தனது மனம் திறந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதுபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.