மாஸ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.
துணை மேயர் சுப. தமிழழகன் தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார் செயலாளர் மாலினி விஜயகுமார்,முதல்வர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

விழாவில் இன்றைய சினிமா மாணவர்களை “சீர்தூக்குகிறதா, சீரழிக்கிறதா” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பேசினார் நாவலர் செந்தில்குமார்
பங்கு பெற்று சிறப்பாக வழி நடத்தினர்.
முன்னதாக சமத்துவ பொங்கல் விழா மாணவிகள் பொங்கலிட்டனர். இதில் மாணவி-மாணவிகளின் வள்ளி கும்மியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உரியடி மற்றும் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
இதில் பேராசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.