குடவாசலில் திருவாரூர் ஆர்டிஓ வை கண்டித்து நடக்க இருந்த போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாட்டால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை பயனாளிகளுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டும்.
அரசு வழிகாட்டி அனைத்து ஆவணங்களும் முறைப்படுத்தப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்திவரும் திருவாரூர் ஆர்டிஒவை கண்டித்து, குடவாசல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் அலுவலகத்தில் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்ட அறிவிப்பை தொடர்ந்து குடவாசல் தாசில்தார் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைப்பின் பேரில், தாசில்தார் தேவகி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், குடவாசல் நகர செயலாளர் சேகர், நகர குழு உறுப்பினர்கள் ராஜா, நீதி ராஜன், சுந்தரி, மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தமிழ் செல்வி, தலைவர் பமிதா ஆகியோர் மற்றும் பயனாளிகள் சமாதான கூட்டத்தில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சமாதான கூட்டத்தில் குடவாசல் துணை ஆய்வாளர், துணை வட்டாட்சியர் மற்றும் விலை இல்லா வீட்டுமனை பயனாளிகளின் குழு நிர்வாகிகள் தர்மகர்த்தா, சாமிநாதன் சாந்தி, ராஜேஸ்வரி, சரஸ்வதி மற்றும் பயனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.