மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் சாலைப்பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.
துவக்கநாள் விழாவில் போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாராயணன், வடக்கு வட்டார ஆர். டி. ஓ. சித்ரா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணகுமார், மனோகர், உலகநாதன் முரளி, சம்பத்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினர். பஸ்களில் படிக்கட்டுகளில்நின்று பயணம் செய்யக்கூடாது, இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து செல்லவும், ஆட்டோ ஓட்டுனர்களிடம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.