விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா விழுப்புரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கதுணைச் செயலாளர் ஜெ. ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற மாநிலதுணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன்,அவைத் தலைவர் மணிமாறன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வட பழனி,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சக்திவேல்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி மாவட்ட வர்த்தக அணி தலைவர் செல்லப்பெருமாள்முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் N. விஜயகுமார், ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகளான மலர்சேகர், தளபதி ரவி, உதயகுமார், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை தமிழக மின்சார வாரியம் சென்னை மைய மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ஜெ. ராஜ்மோகன் செய்திருந்தார்.