மயிலாடுதுறை
அருகே தேரழுந்தூரில் நடைபெறும் கம்பரின் திருவிழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகையொட்டி ஆங்காங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அப்போது தமிழக கவர்னர் பாதுகாப்பை கருதி போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை வழியாக விருத்தாசலம் சென்று கொண்டிருந்தது.
அப்போது அணைக்கரை அருகே திருப்பனந்தாள் மண்ணியாற்று கரை அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் நடராஜ் (வயது 54) ஓட்டினார்.
அப்போது அவருக்கு தீடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை
இழந்து தீடீரென மண்ணியாற்று
கரை அருகே விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். அப்போது சிலருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் விபத்து பற்றி திருப்பனந்தாள்
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.