கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி ரூ.100 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிக்கு (18.01.2024) அன்று அடிக்கல் நாட்டியதையடுத்து,
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.
உடன், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பரமசிவம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.