புதுவையிலேயே நெட்டப்பாக்கம் தொகுதிக்கு என்று தனி சிறப்பு உண்டு. காரணம் இந்த தொகுதியில் இருந்து தான் புதுவைக்கு மூன்று முதல்வர்கள் வந்தார்கள். வெங்கடசுப்பா ரெட்டியார், எம்.டி. ஆர். ராமச்சந்திரன் பிறகு வைத்தியலிங்கம் ஆக இந்த மூன்று முதல்வர்களை தந்த இந்த தொகுதி 24 ஆயிரம் வாக்காளர்களை கொண்டதாகும்.

இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டையாகும்.  தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்னர் இந்த தொகுதி தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

அப்போது புதுவையில் காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டு என் ஆர் காங்கிரஸ் தொடங்கப்பட்ட நிலையில் ,  இந்த தொகுதியிலும் அதன் தாக்கத்தால் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற முத்துக்குமாரசாமி சொற்ப ஓட்டுகளில் தோல்வியை தழுவி அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரியசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் 5 ஆண்டுகள் கடந்து, நடந்த சட்டசபை தேர்தலில்  அதிமுக சார்பில் பெரியசாமியும் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயவேணியும் போட்டியிட்டனர். 

இதில் விஜய் வேணி வெற்றி பெற்று மீண்டும் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் “கை”வசம் ஆனது அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயவேணியும், என் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில்  ராஜவேலும் போட்டியிட்டு ராஜவேலு வெற்றிபெற்றார்.

அவருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. ஆக இந்த நெட்டப்பாக்கம் தொகுதிக்கு யாராக இருந்தாலும் ஒருமுறைதான் எம்.எல்.ஏ. வாக வரமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இது புதுவை மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர்  வைத்தியலிங்கத்திற்கு பொருந்தாது என்று சொல்லப்படுகிறது.

அவர் தந்தை வெங்கடசுப்பா ரெட்டியார் செய்த புண்ணியங்கள் வைத்திரலிங்கத்தை காப்பாற்றிவருகிறது என்று தொகுதியின் மூத்தோர்கள் சொல்லுகின்றனர். புதுவை முதல்வர் ரங்கசாமிபோல், வைத்திலிங்கமும் சாதுவான குணம் கொண்டவர். எம்.பி. வைத்தியலிங்கம் போல் முதல்வர் ரங்கசாமியும் யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார்.

ஆக இந்த இருவர்களும் அதிகம் பேசாமல் இருப்பதே இவர்களுக்கு அரசியல் பலத்தை கொடுத்துவருகிறது. இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்று முடிவாகாத நிலையில், தற்போது காங்கிரஸ், திமுக மற்ற தோழமை கட்சிகள் ஓர் அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஓர் அணியாக உள்ள நிலையில், அதிமுக யாருடன் கூட்டணி என்று முடிவாகாத நிலையில், அந்தந்த கட்சிகளும் உயர்மட்ட அளவில் தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.

கூட்டணி பலாபலன்களை கருத்தில்கொண்டு யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றிக்கனியை சுவைக்கலாம் என்று விழிப்புடன் உள்ளன. இதில் சென்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக விற்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்தது தவறு என்று கட்சியில்உள்ளோர் குமுறிய நிலையில், தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அந்த தவறை செய்யாமல் பாஜக வை கழட்டிவிட்டு, அதிமுக, பாமக உடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி, ராமதாஸ் உடன் ரகசிய பேச்சில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பஜக எப்படியும் இந்தமுறை புதுச்சேரி தம்வசம் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இதற்காக எதையும் செய்யத்தயார் என்று கங்கணம் கட்டியுள்ளது. காங்கிரஸை கழட்டிவிட்டு திமுக தம்முடன் வரவேண்டும் என்றும் அதற்காக இனி திமுக குறித்து எந்த விமர்சனமும் வைக்கக்கூடாது என்று குறிப்பாக அண்ணாமலைக்கு ஆர்டர் போட்டிருப்பதாக பஜக வட்டாரங்கள் சொல்கின்றன. அதற்கேற்றார்போல் அண்ணாமலையும் அடக்கிவாசிப்பது நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கூட்டணி  கவுண்ட்டவுன் தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் 38 நாட்களில்  முடிவு தெரிந்துவிடும் பொறுத்திருப்போம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *