மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
மன்னார்குடி அருகே சாலை அமைக்கும் ரோலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து காரக்கோட்டை என்ற இடத்தில் சென்ற போது சாலை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் ரோலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் காயமடைந்தனர் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து வடுவூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.