கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, மின்னணு வாக்கப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்விற்கான நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பி.புஷ்பா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், தாட்கோ பொது மேலாளர் வேல்முருகன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர், உள்ளிட்ட பலர் உள்ளனர்.