இந்தியா கூட்டணியில் . பிரச்சினைகளை சரி செய்து ஒற்றுமையோடு பா.ஜனதாவை எதிர்த்து ஜெயிப்போம்.

மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆட்சி இந்தியாவில் மீண்டும் தொடரக்கூடாது என்கிற நோக்கத்தோடு தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ராமர்-சீதையை காண்பித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜனதா நினைக்கிறது இது நடக்காது.

ராமர் ஒரு கதையில் கதாநாயகனாக உள்ளவர் அவர் கடவுள் இல்லை பா.ஜனதா கொடுத்த தேர்தல் வாக்குகளை நிறைவேற்றினால் அதனை மக்களிடம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

தமிழக கவனர் ரவி, சர்ச்சைக்குரிய நபராகவே இருந்து வருகிறார். அவர் பொறுப்பு வகிக்கக்கூடிய பதவி கண்ணியமிக்க பதவி. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே அவர் தொடர்ந்து வருகிறார்.மகாத்மா காந்தியால் இந்தியா விடுதலை பெறவில்லை என அவர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். அதே நேரத்தில் குடியரசு தின விழாவிற்காக கவர்னர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்போம். அதில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்.

இந்தியா கூட்டணியில் உள்ள பிரச்சினைகளை பெரிது படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பிரச்சினைகளை சரி செய்து ஒற்றுமையோடு பா.ஜனதாவை எதிர்த்து ஜெயிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் பாரதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *