பெருநகர சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டல கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் சாதாரண கூட்டம் நடைபெற்றது
இதில் ஒன்றாவது வார்டு முதல் 14-வது வார்டு வரை உள்ள மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் வார்டு பிரச்சனைகளை விவாதித்து வந்தனர்
இதனிடையே ஆறாவது வார்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் மிக்ஜாம் புயல் பாதி பால் ஏற்பட்ட எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து நிவாரணம் வழங்கவில்லை என்றும் இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போதும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதால் முறையான நிவாரணம் வந்து சேரவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தார்
மேலும் எண்ணூரில் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக போராடி வரும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அதனை அரசு கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டை வைத்தார்
ஆனால் இதற்கு முறையான பதில் மாநகராட்சி கூட்டத்தில் அளிக்காததால் சாமுவேல் திரவியம் வெளிநடப்பு செய்தார்
பின்னர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு கூட்டணி கட்சிகளுக்குள் இருக்கும் பொழுது பிரச்சனை பண்ணக்கூடாது வெளிநடப்பு செய்யக்கூடாது என வற்புறுத்தியதால் மீண்டும் அவைக்கு வந்த சாமுவேல் திரவியம் அதிகாரிகளை கண்டித்து காரசாரமான விவாதத்தை முன் வைத்தார்
பின்னர் கூட்டத்தில் எண்ணூர் ஒன்றாவது வார்டு நெட்டுக்குப்பம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 33 லட்ச ரூபாய் செலவில் புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கும் பல வார்டுகளில் குடிநீர் வாரிய வடிகால் குழாய்கள் பதிக்கும் பணிகள் பழுதடைந்த சாலைகள் 1.6 கோடி ரூபாய் செலவில் செப்பனிடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன