தமிழ்நாடு ஊர வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை கொடுத்துள்ளனர்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ் என்ற ரெங்கசாமி இவர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருகிறார் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் படும் இன்னல்களை அரசுக்கு எடுத்துரைத்தும் சுட்டிக்காட்டியும் வருகிறார் தொடர்ந்து இன்று அவர் தமிழக அரசுக்கு கொடுத்துள்ள கோரிக்கையில் 1)-கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளருக்கு ஒன்றிய பொது நிதியில் சம்பளம் தேர்வுநிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

2) – கிராம ஊராட்சியில் பணியாற்றும் OHTமோட்டார் இயக்குனர்கள் தற்போது ரூபாய் 4000 சம்பளம் பெற்று வருகின்றனர் அவர்கள் 30 ஆண்டுக்கு
மேல் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

3) – கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள்/ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 10000, தனி நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.

4) -ஒன்றிய பணி மேட்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு அளவு தற்போது இரண்டு லட்சமாக உள்ளதை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

5) – வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

6) – மகளிர் திட்டத்தில் பணிபுரியும் வட்டார மேலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

7) – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் புதியதாக உருவாக்க வேண்டும்.

8) – ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு ஒன்றிய பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

9) – உதவி இயக்குனர் நிலையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும்.

10) – கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

11)- கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 10000 ஆயிரம் வழங்க வேண்டும்.

12) – பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும்.

13) – மாவட்ட அளவில் உதவி இயக்குனர் நிலையில், வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தேர்தல் பணியிடம்
நிரந்தரமாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களுக்காக இரவு பகலாக பாடுபடும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு அவர்களது குடும்ப நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றித் தருமாறு
தமிழக முதல்வர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்குஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை கொடுத்துள்ளார். அவருடன் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரவி, மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன்,
மாநில பொருளாளர் பெரியசாமி கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *