பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி..

30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தனியார் திருமண மண்டபத்தில் சிவஞான முதலியார் நினைவாக பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான 11-ஆம் ஆண்டு சதுரங்க போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை, கோயமுத்தூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர்கள் சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.

9,11,13,17 வயது அடிப்படையில் நடைபெறும் சதுரங்க போட்டியில் வெற்றி பெறும் முதல், இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் நபர்களுக்கு சான்றிதழ்கள் கேடயங்களும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *