மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் – “தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் “, என்ற தலைப்பில் நடந்தது மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்,”தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் ” என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன்,
இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான்,
ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அ.அழகையா, அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா ,சு முனைவர் .நாகவள்ளி ,வனசா ஆகியோர் கவிதை பாடினார்கள் .

கி. கோ.குறளடியான் அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடைப் போர்த்தி” தமிழரின் தொன்மை “நூல் வழங்கி வாழ்த்தினார்கள் .

கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் விருது பெற்றனர் முனைவர் வரதராசன் அவர்களின் நூல் பரிசாக வழங்கப்பட்டன .. . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கி நன்றி கூறினார்.

முன்னாள மாமன்ற உறுப்பினர் விசய ராசன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *