தேனி மாவட்டம்,தே.சிந்தலைச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தின் சார்பில் புனித அந்தோனியார் தேர் திருவிழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பங்குதந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நடத்தப்பட்டு, புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு தேர்பவனியானது துவங்கியது.ஒரு தேரில் வனத்து அந்தோனியாரும், மற்றொரு தேரில் பதுவை அந்தோணியாரும் மேளதாளம் முழங்க வந்த ஊர்வலத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றுஅந்தோனியாரின் அருள் பெற்று சென்றனர்.

நாட்டாமை மணியம் கோவில் பிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தே.சிந்தலைச்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சலேத்மேரி கலந்து கொண்டார்.கடந்த 1952 ஆம் வருடம் கட்டப்பட்ட புனித சவேரியார் தேவாலயத்தில் 1963, 2004 மற்றும் 2023 ஆம் ஆண்டு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *