சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ. 47 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமினாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் செய்தி துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.மணிமண்டபம் பழுதடைந்ததால் மணி மண்டபத்தை சீரமைக்க 47 லட்சம் ஒதுக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணியினை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் மாவட்ட ஆட்சியர் மகா பராதி சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்.

தமிழிசை மூவர் மணி மண்டபம் பணிகள் முடிந்து மாணவர்களின் போட்டி தேர்வுக்குக்கு பயிற்சி மையமாக அமைக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் இரண்டு பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

ஜனநாயகத்தில் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிக்கையை பொறுத்தளவு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எப்படி பாதுகாத்தாரோ அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.பத்திரிக்கையாளர் சிறப்பு சட்டத்தை மத்திய அரசு தான் வரைமுறை படுத்தமுடியும்.மாநில அரசு செம்மைபடுத்தி பத்திரிகையாளர்கள் தாக்கப்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
பேட்டி; மு.பே.சாமிநாதன் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *