கிருஷ்ணகிரி மாவட்டம்

பேலுப்பள்ளி உள்ள
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா
(27.01.2024 ) அன்று நடைபெற்றது.

இதில் முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகரும் ,மத்திய மந்திரியுமான முனைவர் மு.தம்பிதுரை அவர்கள் தலைமை தாங்கினார் . தன்னுடைய தலைமை உரையில், பட்டம் வாழ்வில் ஒரு அங்கம் .
வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும். ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை படிப்பதன் மூலம் அனைத்து துறைகளிலும் அனைத்து மாணவ மாணவியர்களாலும் வெல்ல முடியும். வறுமை நிலையிலிருந்து சாதனை படைத்தவர்கள் ஏராளம் அவர்களை முன்மாதிரியாக கொண்டு படிப்பில் முழு கவனத்துடன் ஈடுபடுதல் வேண்டும். பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து காட்டுவதே ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் கடமையாகும்.

இந்திய பண்பாட்டை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான முனைவர் எம். கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தன்னுடைய சிறப்பு உரையில்,
பட்டம் பெற்ற மாணவ மாணவியர்கள் தான் கற்ற கல்வி தனக்கு மட்டுமல்லாமல் , தன்னுடைய கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் .
கடின உழைப்பால் உயர்ந்த காமராசரை போல செயலில் சிறப்பாக நாட்டு மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் . ஆராய்ச்சி அறிவில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJஅப்துல் கலாமை போல் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர்களை இறுதி மூச்சு வரை பேணிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பட்டதாரியின் கடமையாகும். தலையாட்டி பொம்மை எத்தனை முறை கீழே விழுந்தாலும் , தாழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் நற்பண்பை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் .

நம் நாட்டின் இயற்கை செல்வங்களை பாதுகாக்குதல் வேண்டும் . தனித்திறமையுடன் விளங்கினால் வெற்றி நிச்சயம். முற்றத்துடன் வீடு கட்டி முன்னோர்கள் விருந்தினர்களை உபசரித்தனர். கூட்டுத் திறமையினால் மாணவர்கள் ஒன்று கூடி சேர்ந்து படித்தால் அரசு வேலைகளுக்கு எளிதில் செல்லலாம்.
தான் படித்த கல்வியை கொண்டு சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தன்னுடைய சிறப்பு உரையில் பேசினார் .

மேலும் பட்டமளிப்பு விழாவில் 800 மேற்பட்ட பட்டதாரிகளும், 500க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகளும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வில் நிறைந்த பட்டதாரிகளும் பட்டங்களை பெற்றனர். விழாவில் ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு பாலகிருஷ்ண ரெட்டி பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு சிவி இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் S.கூத்தரசன் MBA அவர்கள் கல்லூரியின் செயலாளர் கி .சுரேஷ் பாபு B.Aஅவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு . தனபால் அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார்.
உயர் கல்வியின் உறைவிடமாக கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது .

கிராமப்புற மாணவ மாணவியர்கள் தனித்திறமைகளை வளர்க்கும் கல்லூரியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *