சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம். மகா பூர்ணாகதியை கண்டு திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் அருகே குமிளங்காட்டில் அருள்மிகு ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மைக்காக யாகம் நடைப்பெற்றது.

குமிளங்காட்டில் சுயம்பு சூலமாக எழுந்தருளி அருள்பாலிகின்ற ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும்,மழை வளம் வேண்டியும்,விவசாயம் தழைத்தோங்கவும் ஸ்ரீ சப்தமண்டல ஆதிநாகசக்தி ஞான சுத்தி யாகம் நடைப்பெற்றது.

இதில் சிதம்பரம்,மயிலாடுதுறை,கடலூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்,முன்னதாக யாகத்தை தெய்வத்திரு தேவேந்திர அடிகளார் நாகாத்தம்மன் அருள் பெற்று துவங்கினார். மகா பூர்ணாகதியின் போது 21 கன்னிகள் யாக மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம் அடைைந்தனர்.

பக்தர்கள் வழியே அடுத்தடுத்து 21 கன்னிகளும் யாக மண்டபத்தில் தோன்றியவுடன் மகா பூர்ணாகதி நடைைபெற்றது. அம்பாளுக்கு முன் எதுவுமே உயர்ந்தது இல்லை என உணர்த்துவதற்காக தங்கம்.வெள்ளி.முத்து பட்டு.நவரத்தினம் ஆகியவையும் மரத்தில் ஆன விவசாய உபகரங்கள், யாகத்தில் இடப்பட்டு நாகத்தம்மனுக்கு சிறப்பு பூர்ணாகதியும். அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *