குடவாசல் அருகே அத்திக்கடை கிராமத்தில் அனுமதி பெறாத ஜெபக்கூடம் மூடி சீல் வைப்பு…’

உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடவடிக்கை..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில் கற்பக விநாயகர் தெருவில் பூர்வீகமாக நடுத்தர மக்கள் வசித்து வருகின்றார்கள். அந்த பகுதியில் சித்தி புத்தி விநாயகர் ஆலயம், காளியம்மன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. இங்கு முழுவதும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களே வாசிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஒருவர் வீடு எடுத்து தங்கி அந்த இடத்தில் என்ற “எழும்பி பிரகாசி” என்ற சபை அமைத்து வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து கடந்த மூன்று வருடங்களாக பொதுமக்களை மதம் மாற்றி தினந்தோறும் அல்லோலியா என்ற கோஷங்கள் எழுப்பி உள்ளனர்..
ஒரு கட்டத்தில் இதற்கு அப்பகுதி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர்..
இந்த நிலையில் உயர்நீதி மன்றம் ஜெபக்கூடத்தை எடுக்க சொல்லி நடவடிக்கை எடுக்க மாறுவது திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது..
கடந்த ஓராண்டு காலமாக போராட்டத்தின் மூலமாக
அத்திக்கடை மக்கள் சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று 31.01.2024 இதன் அடிப்படையில் இன்று குடவாசல் தாசில்தார் முன்னிலையில் சர்ச்சைக்குரிய ‘எழும்பி பிரகாசி’ ஜெபக்கூடம் காவல்துறையினர் பாதுகாப்புடன் மூடி சீல் வைக்கப்பட்டது.
பேட்டி: டாக்டர். சிவசங்கரன்,
குடவாசல்.