பச்சிகானப்பள்ளியில் நடைப்பெற்ற 6 ஆம் ஆண்டு எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு – சீறிப்பாய்ந்த காளைகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு மகிழ்ந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு, போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே பச்சி கானப்பள்ளிகிராமத்தில் 6 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த எருது விடும் விழா நிகழ்ச்சியை தவக்கி வைத்தார்.

எருதுவிடும் விழாக்குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி, சூளகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர், பர்கூர், பாகலூர், கப்பல் வாடி, ஊத்தங்கரை மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.

தமிழக அரசின் நிபந்தனைகள் படி எருதுகளைமுழு பரிசோதனை செய்யப்பட்டு இருபுறமும் தடுப்புகள் அமைத்து அதன் நடுவே எருதுகள் ஓட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு எருதுகளாக விடப்பட்டது, இதில் 120 மீட்டர் தூரத்தினை விரைவாக கடந்த எடுதுகளுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது, பின்னர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த எருதுகளை இளைஞர்கள் உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த எருது விடும் விழாவில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய எருதுகளுக்கு வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் அவர்கள் வெற்றி பெற்ற எருதுகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.70ஆயிரம், 3-ம்மூன்றாவது பரிசாக 50,000 ரூபாய், மேலும் இதுபோன்று 50 காளைகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.

தமிழக அரசின் முழு அனுமதியுடன் நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவத் துறை, சார்ந்த அதிகாரிகளும் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த எருது விழாவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருத்து ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு கண்டு களித்தனர்.

மேலும் இந்த விழா சாமந்த மலை ஊராட்சி, பச்சிக்கான பள்ளி ராணுவ கிராமத்தில், எருதுவிடும் சங்கத்தினை சேர்ந்த விழாக்குழுவினரான ஊராட்சி மன்ற தலைவர் ராணிசின்னப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மல்லிகாமுனியப்பன், ஊர் கவுண்டர் ராமமூர்த்தி, மந்திரி கவுண்டர் ராஜி, கணக்குப்பிள்ளை வெங்கட்டப்பன், வரி கவுண்டர்கள் சீனிவாசன், சிவாஜி, சின்னப்பன், பெரியராஜ், கிருஷ்ணன், மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட இளைஞர்கள் எருது விடும் விழா நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *