வலங்கைமான் அருகே உள்ள சின்னகரம் கிராமத்தில் ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் சித்தர் ஆலயத்தில் 82 -ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சின்னகரம் கிராமத்தில் சின்னகரம் ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் சித்தர் ஆலயத்தில்( பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் குருநாதர்) 82 -ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி காலை எட்டு மணிக்கு அருட்பா, கொடியேற்றம், காலை ஒன்பது மணிக்கு அகவல் பாராயணம், காலை 10:30 மணிக்கு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து காலை 11-30 மணிக்கு மகேஸ்வர பூஜையும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. சுவாமிகள் படம் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சின்னகரம் ஸ்ரீமத் சரவணரனந்தா சுவாமிகள் அன்னதான டிரஸ்ட் மற்றும் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் அடியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.