அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநில தலைவருமான மறைந்த மாவீரன் ஜெ குருவின் 63-வது பிறந்த நாள் விழா

வன்னியர் ஜெயந்தி விழாவாக மாவீரன் மஞ்சள் படை நிறுவனரும் அதன் தலைவருமான அவரது மகன் குரு கனலரசன் தலைமையில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

இதில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க பிரகதீஷ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து புனித நீரை ஊர்வலமாக கொண்டு வந்து மாவீரன் குருவின் திரு உருவ சமாதியில் தெளித்து

யாகம் வளர்த்து கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், நெய்வேத்தியம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கோடிக்கணக்கான வன்னியர்களின் சமூக பாதுகாவல் தலைவன் மாவீரன் குருவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

இதில் மாவீரன் மஞ்சள் படையின் நிறுவனரும் அதன் தலைவருமான குரு கனலரசன் மாவீரனது பிறந்தநாளை வன்னியர்களின் வன்னியர் ஜெயந்தி விழாவாகவும அவரது எதிர்வரும் அடுத்த வருட பிறந்தநாளுக்கு

அவரது மணிமண்டத்தினுடைய பணிகள் முழுவதுமாக முடிக்கப்பெற்று வன்னியர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் கொண்டு வரபோவதாகவும,

நிருபரின் தேர்தல் குறித்த கேள்விக்கு வன்னியர்களின் சமுதாயத்திற்கும், வன்னியர்களின் உடைமைக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு கிடைக்க வகையில் செயல் படும் கட்சியினருக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் குரு கனலரசன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள் உறுப்பினர்கள், வன்னிய சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் என சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *