கீழ வீராணத்தில் முஸ்லிம் கல்விக் குழுமம், சார்பில்
முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா, மற்றும் பரிசலிப்பு விழா:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழ வீராணத்தில் முஸ்லிம் கல்விக் குழுமம், சார்பில்
முஸ்லிம் தொடக்கப் பள்ளி வளாகத்தில்
விளையாட்டு விழா, மற்றும் பரிசு அளிப்பு விழா நடைப்பெற்றது.

முஸ்லிம் கல்வி குழுமம் தலைவர் ஹாஜி, முஸ்தபா கமால் தலைமை உரை வழங்கினார்

முஸ்லிம் பள்ளிகள் தாளாளர் சிந்தா மாதர்,
முஸ்லிம் கல்விக் குழுமம் நிர்வாக அலுவலர் சுபாஷ் துரைப்பாண்டியன்,ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முன்னாள் பள்ளி தாளாளர் அசன் வறவேற்புரை வழங்கினார் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருளானந்தம்,ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் லோகநாதன்,கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன்,வீ கே புதூர் காவல் உதவி ஆய்வாளர்கள் கௌசல்யா, தேவப்பிரியா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராசு ஆகியோர்
சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தும் , மற்றும் மாநில மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், யோகா, கரத்தே, சிலம்பம் மற்றும் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் ஆசிரியர்கள் மைதின் நிஷா, ஜான்சிராணி, சுமையா ,மரியகுளோரி, சிவரஞ்சனி, அருள்கனி, முருகேஸ்வரி,ரஹமத் நவ்ஷாத், ஜன்னத்பீர் தெளஸ், மருதம்மாள், சகுந்தலா, ஷைனி,
அல்பினா,ஸபீதா, ராஜேஸ்வரி, ஸ்டெல்லா, காதர் பாத்து, செல்வி, சிவகாமி வேலா,அனிஷா பானு,
கஷப்பிரியா, அனிதா,யோகா மாஸ்டர் விஷ்ணுகுமார். சிலம்பு கராத்தே மாஸ்டர் ஆஷா, மற்றும் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வீராணம் முஸ்லிம் தொடக்கப்
பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுந்தரம்,
நன்றியுரை வழங்கினார்.

இவ் விழாகான ஏற்பாடுகளை வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி, முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், ஜமாஅத் கமிட்டியினர், கல்விக் கமிட்டியினர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *