தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்ற ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா தென்காசி மாவட்ட ஆட்சியர் எ.கே .கமல் கிஷோர் தலைமையில் நடைப்பெற்றது.
சங்கரன்கோவில்
சட்ட மன்ற உறுப்பினருமான
ஈ.ராஜா, வாசு தேவநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலைக் குமார் மற்றும் தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் எஸ. பழனிநாடார்,தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வே.ஜெயபாலன்,ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ..
நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .கே.கே எஸ் எஸ் ஆர்
ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார் .
இந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா மற்றும் அரசு அதிகாரிகள், ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.