மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 12 -ம் ஆண்டின் அமைப்பு தின கொடியேற்றி, பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் வட்டத் தலைவர் எஸ். புஸ்பநாதன் தலைமை வகித்தார்.
செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகம்$ முன்பு அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து பேரவையில் பங்கேற்று மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக முன்னாள் தலைமை ஆசிரியர் புலவர் சிவ. செல்லையன், வட்ட துணைத் தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன், வட்டத் தலைவர் நடராஜன் ஆகியோர் வாழ்க்கை பேசினார்.
வட்ட துணைத் தலைவர் சண்முகம் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பு ஊதியம் பெற்று ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூபாய் 7,850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை தீர்வு செய்து, அனைவருக்கும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.