தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது..

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் 55 வது ஆண்டு நிறைவு தினம் சனிக்கிழமை இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழயை பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சின்னகுளம் மாரியம்மன் கோவில் பகுதி வரை அமைதி ஊர்வலம் திருப்பத்தூர் நகர திமுக சார்பில் நகர செயலாளரும் மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அமைதி ஊர்வலம் முடிவில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட சேர்மன் சூரியகுமார், நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், நகர்மன்ற துணை தலைவர் சபியுல்லா, ஒன்றிய திமுக செயலாளர்கள் குணசேகரன்,மோகன்ராஜ், முருகேசன், திமுகவின் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் திமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..