பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாஹிரா பானு தலைமையில் பத்திற்கு மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் குடி போதையில் வாகனம் செலுத்துவது அதி வேகமாக வாகனத்தை இயக்குவது ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வது காப்பீடு இல்லாமல் செல்வது இது போன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் செலுத்திய 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்ட காவலர்கள் பலர் ஈடுபட்டனர்