மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்!
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் மாவட்டச்செயற்குழு கூட்டம் மாவட்டதலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டி கல்வி மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன் வரவேற்றார். பொருளாளர் மாவட்டப் ஹெலன் தெரேசா வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
மாவட்டச்செயலாளர் சீனிவாசன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப். பேசினார். கூட்டத்தில் வருகிற 15ம் தேதி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் கால வாக்குறுதிகளைநிறை வேற்ற வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய ஜாக்டோ ஜியோ வின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் நமது இயக்கத் தின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயற் குழு உறுப்பினர் சக்திவேல் நன்றி கூறினார்.