செய்தியாளர் தருண்சுரேஷ்
முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் s.ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செம்படவன்காடு பைபாஸ் சாலையில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பனை செய்து வருது தெரியவந்ததையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் மேகன்ராஜ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை துரத்தி பிடித்து கைது செய்தனர்.
அவரை பிடித்து விசாரணை செய்த போது
முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவை சேர்ந்த முகமது தாஹா என்பவரின் மகன் முகமது ரஃபாவுதீன் ( 22) என்பவர் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 52 பாக்கெட்டுகள் மற்றும் 250-கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய நண்பர்கள் எதும் வேற எங்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.