தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தா கிராமத்தில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 9.77 லட்சத்தில் புதிய நியாயவிலை கடை திறப்புவிழாஆலங்குளம் ஒன்றிய சேர்மன், எம் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் (பழனி) (எ) பால்துரை அனைவரையும் வரவேற்றார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழநி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ9.77 லட்சத்தில் புதிய நியாயவிலை கடை யினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு முதல் விற்பனை தொடங்கி வைத்தனர்.
பின்னர் புதிய நியாய விலை கடைக்கான கல்வெட்டினை ஆலங்குளம் ஒன்றிய சேர்மன், எம் திவ்யா மணிகண்டன் திறந்து வைத்தார்.
அதனையெடுத்து அதே வளாகத்தில் திமுக பொறுப்பாளர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பெற்றது.
இந் நிகழ்வில் தொழில் அதிபர் மணிகண்டன், சுரண்டை திமுக நகர செயலாளர் கணேசன், சசிக்குமார்,நியா விலை கடை விற்பனயாளர் கடல்குமார்,அரசு ஒப்பந்ததாரர் சுப்பையா, பல பத்திரராமபுரம் முருகேசன்,
அவைத்தலைவர் வேல்சாமி, கருவந்தா திமுக கிளை கழக செயலாளர் வெள்ளத்துரை, இளைஞர் அணி செயலாளர் அந்தோணி,துணை செயலாளர் அன்னமுருகன்,ஆறுமுகம், சண்முகையா, மரியதாஸ், சிங்கத்துரை, செல்வராஜ், ஜெயராஜ்,
பிச்சைகளை , பவுல்,மகளிர் அணியினர்
மல்லிகா, ஜெசிந்தா ,காங்கிரஸ் நிர்வாகி சிங்கம் , உள்பட பலர் கலந்து கொண்டனர் .