செங்கல்பட்டு மாவட்டம் தேசிய சமூக நல அமைப்பு
மனித உரிமை பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் NSWF தேசிய சமூக நல அமைப்பு மனித உரிமை பிரிவின் சார்பில்
செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை மனு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அலுவலர் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு ஆதி திராவிட நல பள்ளி முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அப்பள்ளியில் பயிலும் துவக்கப்பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
மேலும் இதன் காரணமாக அந்தக் கட்டிடத்தை முழுமையாக இடித்து புதிய கட்டிடம்
கட்டி தரவேண்டிய கோரிக்கை மனு வழங்கினர். அப்போது அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு.வேலு, மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடகிருஷ்ணன்,ஒன்றிய இணைத்தலைவர் தஷ்ணாமூர்த்தி,ஒன்றிய இணைச் செயலாளர் டேவிட், நகர உறுப்பினர் பிரபுராஜ், உள்ளிட்ட இயக்க நிர்வாகிகள் பலர்
உடன் இருந்தனர்.