தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஐசிடிஎஸ் திட்டதிற்கு நிதி குறைந்ததை கண்டித்தும், மே மாத விடுமுறையை
ஒரு மாதமாக அறிவிக்க கோரியும், காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம நடைப் பெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர சங்க தென்காசி மாவட்ட துணைதலைவர்
முருகம்மாள் கலந்து கொண்டு தலைமையேற்று தலைமையுரை வழங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் நாகேஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் சந்தன குமாரி, முருகேஸ்வரி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வட்டக்கிளை தலைவர் வேல்விழி, செயலாளர் முருகேஸ்வரி, பொருளாளர், ராஜேஸ்வரி,
துணை செயலாளர் சீதாலெட்சுமி, ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஐசிடி எஸ் திட்டதிற்கு நிதி குறைந்ததை , கண்டித்தும், மே மாத விடுமுறையை
ஒரு மாதமாக அறிவிக்க கோரியும், காலி பணியிடங் களை நிரப்ப வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது
அதனை யெடுத்து மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிக்கப்பட்டது இந்த ஆர்ப்பட்டததில் தென்காசி வட்டாரம் வடகரை சுந்தர பாண்டியபுரம்
மேலகரம், பகுதிகளிலிருந்து 185 -க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார சங்க நிர்வாகி பாக்கியலட்சுமி நன்றியுரை வழங்கினர்.