செங்கல்பட்டு மாவட்டம்
சூனாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு
மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கபடி,மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் உதவி தலைமை ஆசிரியர் கே.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
மணிகண்டன் வரவேற்புரையாற்றினார்.
திலகம், தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சரத் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில்
சிறப்பு விருந்தினர்களாக பெற்றோர் ஆசிரியர் கழக
பொருளாளர் டாக்டர் ஆர்.கோபுராஜ், முன்னாள் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர்
சு.க.விடுதலைச் செழியன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் விஜயலட்சுமி ஆசிரியை நன்றியுரையாற்றினார்.