ஆலங்குளம் அருகே வெண்ணிலிங்க புரத்தில் முப்பெரும் விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காவலாக்குறிச்சி கிராமம் வெண்ணிலிங்க புரத்தில்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம் கூடுதல் கட்டிட திறப்பு விழா, ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் துவக்க விழா, ௹ 10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகிய முப்பெரும் விழா நடைப்பெற்றது.

காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ் தலைமை ஏற்று தலைமையுரை வழங்கினார்

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ௹ 13 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அதனையெடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம் கூடுதல் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி. குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்து பேசினார்.

இந்நிகழ்வில, தொழில் அதிபர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரி பாலகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நெட்டூர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், கீழக்கலங்கல், சந்திரசேகர்,
அய்யனார்குளம் நீதிராஜன், வாடியூர் ஸ்தாபக அந்தோணி, (எ ) பதிவர், முத்தம்மாள்புரம்
ஆர் பி முருகன், காடுவெட்டி முத்துலட்சுமி
மருதப்பாண்டியன், அச்சங்குட்டம் வெங்கடேஸ்வரி முருகேசன், வடக்கு காவலாகுறிச்சி பாலசுப்ரமணியன், கிடாரக்குளம்
சாந்தி ஆண்டி, வெண்ணிலிங்கபுரம்
நாட்டாமை முருகன், வெண்ணிலிங்கபுரம் கிளை நிர்வாகிகள், சுப்பையா, செல்லப்பாண்டி ,
பரமசிவன் ,காவலாகுறிச்சி ரவிச்சந்திரன், தட்டப்பாறை சுப்பிரமணியன்,காவலாகுறிச்சி அந்தோணி, மா.தி.மு.க முருகன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி,அம்பிகாசெல்வி,
ஜெயக்குமார்,செல்வி, சுந்தரி, அம்பிகா, பொன்னம்பளம், குமார், மகளிர் குழு நிர்வாகிகள் பால் தாய், சாந்தி, அமுதா, மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *