கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கிராமத்தை நோக்கி செல்லும் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கிராமங்களை நோக்கி செல்லும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர், மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.நரசிம்மன் வேட்டியம்பட்டி, சின்ன பனமுட்லு, தொகரப்பள்ளி கூட்ரோடு, தொடரப்பள்ளி, சந்தூர், போச்சம்பள்ளி, சிப்காட், பாளேத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் கிராமத்தை நோக்கி செல்லும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய திட்டங்களையும் எடுத்துக் கூறி, பொதுமக்களிடத்தில் குறைகளையும் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ.எம்.ரமேஷ். ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் தேவராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் மீசை அர்ஜுனன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் விவேக், ராணுவ பிரிவு மாவட்ட துணை தலைவர் மாதவன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் சிவராமன், பாராளுமன்ற கமிட்டி குழு உறுப்பினர்கள் வேலவன், மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.