டென்னி காய்ட் போட்டியில் வெற்றி பெற்ற வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாகை- புதுச்சேரி மண்டல அளவிலான பெண்களுக்கான டென்னி காய்ட் போட்டி ஆரிபா பாலிடெக்னிக் கல்லூரி ஈசணூரில் வைத்து நடைபெற்றது.
இப் போட்டியில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி அணியினர் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இரண்டாம் பரிசை தட்டி சென்றனர்.
இதே போல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாகை- புதுச்சேரி மண்டல அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டி விழுப்புரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி அணியினர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
அவர்களை கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ், முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன், துறை தலைவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.