புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்……

புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் மண்டல செயலாளர் சதா .மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி. அசோகன் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரியும் , சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறையினரை கண்டித்தும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அமைப்பாளர் திராவிட நாத்திகன், மேற்கு ஒன்றிய பொருளாளர் வேலு. யோகானந்தம் ,ஒன்றிய துணை செயலாளர் சம்சா ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பெரிய. கலைச்செல்வன் ,அரசு ஊழியர் ஐக்கிய பேரவை ஒன்றிய செயலாளர் கணேசன், போக்குவரத்து தொழிற் சங்கத்தின் செயலாளர் நக்கம்பாடி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கையில் கொடியுடன் கண்டன. முழக்கமிட்டனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *