பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வட்டத்தில் விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து சண்முகபுரம், பூம்புகார்நகர், அம்பேத்கர்நகர், சரஸ்வதிநகர், TS கோபால்நகர் போன்ற பல நகரங்களுக்கு செல்லும் பாதை நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அப்பாதையில் செல்வது சிரமமாக இருந்தது.
சமூகவிரோதிகளால் பாதுகாப்பற்ற தன்மை. 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் தொடர் முயற்சியால் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. துவக்க நிகழ்வு நடந்தது. அந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் தனியரசு சாலை மற்றும் மின் விளக்குகள் பூமி பூஜை நாட்டப்பட்டது
சாலை மதிப்பீடு 43 லட்சம் மின்விளக்குகள் மதிப்பீடி 4லட்சம் ஆதி திராவிட காலனி டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம் சுற்றுச்சூழல் 100 அடி மதிப்பீடு 20 லட்சம் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அடிக்கல் நாட்டப்பட்டது மாமான்ற உறுப்பினர் ஜெயராமன், வார்டு உதவிபொறியாளர் அன்னலஷ்மி, சண்முகபுரம் நகர்நலச் சங்க செயலாளர் சரவணன், முன்னால் தலைவர் அர்ச்ஜுனன் TS.கோபால் நகர் தலைவர்கள் மோகனசுந்தரம், செல்லதுரை, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், கதிர்வேல் பகுதி செயலாளர் சி.பி.எம் பகுதிகுழு உறுப்பினர் வெங்கட்டையா உட்பட பலர் பங்கேற்றனர்.